இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, தனது கைகளால் இனிப்புகளை வழங்கிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய அணி வீராங்கனைகள் அனைவரையும் பிரதமர் மோடி தனது இல்லத்திற்கே வரவழைத்துப் பாராட்டினார்.
அப்போது வீராங்கனைகள் அனைவருக்கும் பிரதமர் மோடி லட்டு வழங்கினார். இந்தச் செயல் பிரதமர் மோடியின் எளிமையை காட்டுவதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
















