வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தனியார் பள்ளி வேனில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரதரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் – மோனிகா தமபதியின் 4 வயது மகள் கீர்த்தீஷா, பரதராமி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்துள்ளார்.
வழக்கம்போலப் பள்ளி வேனில் இருந்து இறங்கிய கீர்த்தீஷா, முன்பக்கம் கடந்து செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநர் வேனை இயக்கியதால் கீர்த்திஷா, வேனில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
















