மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் மணி விழா யாகசாலை பூஜைக்காக 4 யானைகளில் புனிதநீர் உர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழா வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக, ஆதீன மடத்தின் வளாகத்தில் 4 யாகசாலைகள் அமைக்கப்பட்டு, 8 கால பூஜை நடைபெறுகிறது.
இதில் பூஜிப்பதற்காகக் காவிரி ஆற்றில் இருந்து, ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு 4 யானைகளின் மீது புனிதநீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
இந்தப் புனித நீரால், வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள மணிவிழா அன்று, சொக்கநாத பெருமானுக்கு ருத்ராபிஷேகமும், ஆதீனகர்த்தருக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.
















