செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள Memory Chip பற்றாக்குறையால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
சாம்சங் போன்ற பெரிய சிப் தயாரிப்பு நிறுவனங்கள், அதிக இலாபம் ஈட்டும் AI தரவு மையங்களுக்குத் தேவையான அதிவேக மற்றும் அதிக சேமிப்புத் திறன் கொண்ட சிப்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன.
இதனால், நடுத்தர மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஸ்டாண்டர்டு மெமரி சிப்கள் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்து,
சந்தையில் அவற்றின் விநியோகம் வெகுவாகக் குறைந்துள்ளது. சிப் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், Vivo, Oppo, Samsung போன்ற முன்னணி நிறுவனங்கள் சில மாடல்களின் விலையை 500 முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளன.
மேலும் விரைவில் அறிமுகமாக உள்ள Flagship போன்களின் விலை 6 ஆயிரம் ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
















