திமுகவில் பெண்களை இழிவுபடுத்தினால் கூடுதல் மரியாதையும், பொறுப்புகளும் வழங்கப்படுவதாகப் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் பெண்களை இழிவுபடுத்தி பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பொறுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் பரிசாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய திமுக அரசுப் பதவி விலக வேண்டும் எனவும் கூறினார்.
















