கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியைப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கக் கோரி, காங்கிரஸ் கட்சியின் பட்டியலின தலைவர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்குள் தகுதிவாய்ந்த பட்டியலின தலைவர்கள் இருந்தபோதிலும், முதலமைச்சர் பதவி அவர்களிடம் வழங்கப்படாமல் தடுக்கப்படுவதாகச் சில தலைவர்கள் வாதிடுகின்றனர்.
பட்டியலின தலைவர்களை முதலமைச்சர் பதவிக்கு உயர்த்துவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கி ஹோளியின் இல்லத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர், முதலமைச்சர் பதவியைப் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வலியுறுத்தினர்.
















