கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை கார் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோழிக்கோடு குத்தாளி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த மாருதி கார், திடீரென மைதானத்தில் வேகமாக ஓடத் தொடங்கியது. பின்னர், காரை இயக்கிய நபர், விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயன்றார்.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அங்கிருந்து ஓடித் தப்பினர். இருப்பினும், மீண்டும், மீண்டும் மாணவர்களை காரால் மோத முயன்ற அந்நபர், ஆசிரியர்கள் வருவதை கண்டவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
















