நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய தேவரகொண்டாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, உதய்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது, அவர் அணிந்திருந்த மோதிரங்கள் குறித்து பேசப்பட்டது.
அப்போது, அந்த மோதிரங்கள் ‘மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்று மட்டும் கூறிய ராஷ்மிகா, நிச்சயதார்த்தம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இவர்களது திருமணம் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
















