பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, பாஜக மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில்,
பாஜக மாநில மகளிர் அணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேட்டியளித்த கவிதா ஸ்ரீகாந்த், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டினார்.
















