வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெறும் கொண்டாட்டங்களில் சமுதாயத்தில் உள்ள அனைவரும் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்துள்ளது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வந்தே மாதரம் பாடலை இயற்றிய ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு ஆர்எஸ்எஸ் தனது மரியாதையை செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
1896-ல் தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் இனிமையான இசையில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல், தேசத்தின் ஆன்மாவின் குரல், பிரகடனம் மற்றும் உணர்வாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடல் நமது சமுதாயத்தின் தேசிய எழுச்சி, கலாச்சார அடையாளம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் உறுதியான அடித்தளமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஸ்வயம்சேவகர்கள் உட்பட அனைவரும் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















