வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1896ஆம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்து பாடியதாகவும்,
அதன் பிறகு வந்தே மாதரம் தேசிய பாடலாக விடுதலை போரின் உணர்ச்சி முழக்கமாக நாடு முழுவதும் எதிரொலித்தாகவும் தெரிவித்துள்ளார்.
வந்தே மாதரம் குறித்த உணர்ச்சி ததும்பும் பாடலை தமிழகத்தின் தெருவெல்லாம் மகாகவி பாரதியார் முழுங்க செய்தார் எனவும் கூறியுள்ளார்.
பாரத நாட்டின் ஒற்றுமை உணர்ச்சியை வெளிப்படுத்தும் வந்தே மாதரம் பாடல் இயற்றபட்டு 150வது ஆண்டு நமக்கு உவகையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வந்தே மாதரம் என்ற போர் வெற்றி முழக்க பாடலை நாம் அனைவரும் ஒன்றுக்கூடி பாடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
















