மடப்புரம் கோயில் காவலாளி மரணம் தொடர்பான ஆய்வக முடிவுகளை, டெல்லி ஆய்வகம் 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கூறினார்.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அஜித்குமார் கொலை வழக்கில் டெல்லியில் இருந்து தடயவியல் பரிசோதனை முடிவுகள் வரவில்லை எனவும்,
அந்த முடிவு வந்த பிறகே வழக்கில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனவும் குறிப்பிட்டார்.
இதைகேட்ட நீதிபதிகள், டெல்லி ஆய்வகம் அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவுகளை 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
















