சேலம் மாவட்டம் சங்ககிரிஅருகே 2 மூதாட்டிகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்தனர்.
இளம்பிள்ளை தூதனூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி ஐய்யனார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவலர்களை பார்த்ததும், அவர் கத்தியால் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் போலீசார், வேறு வழியின்றி ஐய்யனாரை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்தில் மாவட்ட பொறுப்பு எஸ்பி விமலா உள்ளிட்ட காவல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
















