நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலையில் தேவஸ்தானத்தின் மாதந்திர கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், திருமலையில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி எந்த எந்த இடங்களில் தரிசன டோக்கன்கள் வழங்குவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
















