செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற வந்தேமாதரம் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் வந்தேமாதரம் பாடும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையன் அளித்த பேட்டியை பார்த்ததாகவும், அதில் சரியான தகவல் இல்லை என்றும் கூறினார்.
செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார்? என்ற தெளிவான தகவல் இல்லை என்றும் நயினார் கூறினார்.
















