வந்தே மாதரம் பாடல் மதம் சார்ந்த பாடல் அல்ல, பாரத தாயை பற்றி புகழ்ந்து பாடக்கூடிய பாடல் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் ராகினிபட்டி கிராமத்தில் பாஜக சார்பில், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, வந்தே மாதரம் பாடல் பாரத மாதாவை பற்றி புகழ்ந்து பாடக்கூடிய ஒரு பாடல் என்றும், 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படும் போது இந்த பாடலை தேசிய கீதமாக அறிவிக்க பலர் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
ஆனால், ராணுவ நடவடிக்கைக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அறிவிக்கவில்லை எனவும் விளக்கமளித்தார்.
















