திரைப்பட புகழை நம்பி பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக சிலர் நினைக்கிறார்கள் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தலியள்ளி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் புதிய கட்சிகள் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
அவர்கள் வெளியே சென்று மக்களை சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாக தொடர்பு வைத்து கொள்வதில்லை என்றும் அவர் கூறினார்.
ஏதோ சினிமாவில் நடித்தார்கள், அந்த புகழை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல தன்னை முதன்மைப்படுத்தி கொண்டு, அவர்களும் தேர்தல் களத்தில் வந்து நிற்பதாகவும் தெரிவித்தார்.
















