பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செல்ஃபோனில் டார்ச் அடித்து 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அங்கன்வாடி ஊழியர்களான தங்களை அரசு பணியாளர்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது செல்போன்களில் டார்ச் லைட் அடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















