இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாஜக தலைவராகவும், அமைச்சராகவும், இந்தியாவின் துணை பிரதமராகவும், திரு. லால் கிருஷ்ண அத்வானி ஜி அவர்களின் பங்களிப்பு அளப்பறியது என தெரிவித்துள்ளார்.
இன்று நம் பாரத தேசம் உலகின் சக்தி வாய்ந்த நாடாக திகழ்வதற்கு, அவரது தீர்க்கமான சில முடிவுகளும் காரணம் என்றும் கூறியுள்ளார்.
இன்றைய தினத்தில், திரு. அத்வானி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















