ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திமிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு ESI மற்றும் PF பிடித்தம் செய்வதில் முறைகேடுகளை நடைபெற்று வருவதாகவும், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, பேரூராட்சி நிர்வாகம் அதிகளவில் பணிச்சுமையை ஏற்படுத்தி மன உளைச்சல் அடைய செய்வதாக தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
















