ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள் வாடகைக்கு விடப்படுவதாக வியாபாரிகள், கோயில் இணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
பவானில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 34 கடைகள் உள்ளன. அண்மையில் இக்கடைகள் 16 லட்சம் ரூபாய்-க்கு ஏலம் விடப்பட்டன.
ஏலம் எடுத்த திமுக பிரமுகர்கள், கடைகளை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ருபாய் வரை உள் வாடகைக்கு விட்டு கோயிலுக்கு இழப்பீடு ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் கோயில் இணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். எனவே கோயில் நிர்வாகம் ஏலத்தை ரத்து செய்து மறு ஏலம்விட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















