இன்று பிறந்த நாள் கொண்டாடும் எல்.கே.அத்வானிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும்
பாஜகவின்சித்தாந்த அடித்தளத்தை வடிவமைப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உண்மையான அரசியல்வாதி அத்வானி என தெரிவித்துள்ளார்.
அவரது நேர்மை, ஞானம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை பல தலைமுறை காரியகர்த்தர்களை தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நமது தேச சேவையில் நீண்ட ஆயுளுடனும் வாழ ஆசீர்வதிக்கப்படட்டும் எனறும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















