மெலிசா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜமைக்கா, கியூபாவிற்க இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மெலிசா சூறாவளியால், ஜமைக்கா, கியூபா நாடுகள் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகளை எதிர்கொண்டன.
இந்தப் புயல் காரணமாக, 75 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கியூபா மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறது.
தங்களுக்கு உதவிகள் செய்து ஆதரவளித்ததுக்கு ஜமைக்கா, கியூபா நாடுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
















