ரஷ்யாவில் கடைக்குச் சென்று மாயமான இந்திய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள லக்ஷ்மன்கரைச் சேர்ந்த அஜித் சிங் சவுத்ரி, கடந்த 2023-ம் ஆண்டு ரஷ்யாவின் உபாவில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.
கடந்த 19-ம் தேதி பால் வாங்க செல்வதாகக் கூறி விடுதியை விட்டு வெளியேறிய அஜித் சிங் சவுத்ரி மாயமானார்.
இதனையடுத்து உள்ளூர் அதிகாரிகள் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் 19 நாட்களுக்குப் பிறகு அஜித் சிங் சவுத்ரியின் உடல் அங்குள்ள வெள்ளை நதியை ஒட்டிய அணையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















