எர்ணாகுளம் – பெங்களூரு இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குழந்தைகளுடன் கலந்துரையாடி இனிப்புகளை வழங்கினார்.
வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எர்ணாகுளம் – பெங்களூரு உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
எர்ணாகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டார்.
தொடர்ந்து வந்தேபாரத் ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
















