இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 54 பேர் காயமடைந்தனர்.
வடக்கு ஜகார்த்தாவின் கெலாபா காடிங்கில் உள்ள பள்ளியின் வளாகத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 54 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
















