நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யுமாறும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதால், அமைச்சர் நேருவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் வழங்கியிருப்பதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இரண்டாயிரத்து 538 பணியிடங்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
பின்னர், ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், தஞ்சையில் திமுக சார்பில், நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்றார்.
அப்போது, மத்திய அரசுக்கு அதிராகத் திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்த நிலையில், அமைச்சர் நேரு அமைதியாக இருந்துள்ளார்.
அமலாக்கத் துறையின் நெருக்கடியால், அமைச்சர் நேரு அமைதியாகி விட்டதாகக் கூட்டத்தில் பங்கேற்ற சொந்த கட்சிகாரர்களே முணுமுணுத்துள்ளனர்.
















