டிஎன்ஏ கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் காலமானார். சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் டிஎன்ஏவை முதன்முதலில் கண்டறிந்தார்.
ஆனால் அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஆங்கில இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் 1953ம் ஆண்டு டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டுபிடித்தனர்.
மரபணு பொறியியல், மரபணுச் சிகிச்சை மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு இந்தக் கண்டுபிடிப்பு வழிவகுத்ததால் இருவருக்கும் 1962ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
இந்நிலையில் 97 வயதான ஜேம்ஸ் வாட்சன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
















