உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நாடு முழுவதும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அதிகளவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நாடு முழுவதும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அதிகளவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ((NEXT)) அதன்படி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகள், தமிழக தொழில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஓசூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக, ஒவ்வொரு இடத்திலும் 200 முதல் 250 ஏக்கர் வரை தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தருமாறும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தி தந்தால் பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாகப் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைத்துதரப்படும் எனத் தமிழக அதிகாரிகளிடம், மத்திய அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
















