டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடத்துவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை வலுபடுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை எதிர்நோக்குவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
















