சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மூதாட்டிகள் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை சுட்டுப்பிடித்த நிலையில், அவருக்கு உதவியாக இருந்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இளம்பிள்ளை அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அய்யனார் என்பவரை ஒருக்காமலை பகுதியில் போலீசார் சுற்றி வளைத்துத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துக் கைது செய்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொலையாளிக்கு உதவி புரிந்த தூதனூர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், மூதாட்டிகளின் நகைகளைப் பறிப்பதற்கு தேவையான கட்டிங் பிளேயர் வாங்கி கொடுத்ததும், மூதாட்டிகளை கல்குவாரியில் வீசுவதற்கு பூபதி உதவி புரிந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
















