அமெரிக்காவின் வடகரோலினாவில் கோ கார்ட்- கார் பந்தய நட்சத்திர வீரர் டைலர் வீவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24ஆம் தேதி கார் பந்தய வீரர் டைலர் வீவர், தனது வருங்கால மனைவியுடன் வட கரோலினாவின் ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜாகுவேவியஸ் கிரெய்க் மற்றும் குயிட்டெஸ் வாட்கின்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தின்போது இந்தக் கொலை நடந்ததாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
















