S.I.R. படிவங்களை வாக்காளர்களுக்கு விநியோகிக்க, ஜூஸ் கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் மாநகராட்சி அலுவலர்கள் வழங்கியது ஆடியோ பதிவு மூலமாக அம்பலமாகியுள்ளது.
சென்னை வேளச்சேரி 87-வது வார்டில் S.I.R. படிவங்களை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, வாக்காளர்களுக்கு S.I.R. படிவங்களை வழங்காத அலுவலர்கள், அவற்றை ஜூஸ் கடையில் பணியாற்றும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்குமாறு கூறியுள்ளனர்.
படிவங்களைப் பெற்ற அந்தப் பெண், தனது மகனிடம் கொடுத்து விநியோகிக்குமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்த பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், ஜூஸ் கடை பணியாற்றும் பெண்ணைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார்.
அப்போது, தன்னிடம் S.I.R. படிவங்களை அலுவலர்கள் வழங்கியதாகவும், தான் அதனை மகனிடம் கொடுத்து விநியோக்க கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
















