திண்டுக்கல் அருகே காற்றாலை இறக்கையை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிரா நோக்கிக் காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் ஒருவழிப் பாதையில் இயக்கப்பட்ட நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், மினி லாரி மோதிப் படுகாயமடைந்தார். இந்த விபத்துகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















