திருவண்ணாமலையில் நிலத்தகராறு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமார்- பூங்கொடி தம்பதியினருக்கும், அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு நபருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது, இதுகுறித்து கடலாடி காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற குமார் மற்றும் அவரது மனைவி மண்ணெண்ணெய்யை மேலே ஊற்றித் தீக்குளித்தனர்.
அப்போது, இருவரின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவர்களை மீட்டு உடனடியாகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
















