திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே காணாமல் போன பெண் 28 நாட்களுக்குப் பிறகு கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்சா என்பவர் கடந்த மாதம் 15ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்ற நிலையில் மாயமானார்.
இது தொடர்பாகச் செல்போன் சிக்னலை வைத்து அம்சாவின் தோழி நேத்ரா மற்றும் திருப்பதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னுக்கு பின் முரணாக இருவரும் பதில் அளித்த நிலையில், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது நான்கு சவரன் நகைக்காக அம்சாவை அழைத்துச் சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாகக் கிடந்த அம்சாவை 28 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
















