பாரிஸில் நடைபெற்ற இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்ச்சியில் போராட்டகாரர்கள் சிவப்பு நிற புகை குண்டைப் பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஃபில்ஹார்மோனி டி பாரிஸில் உள்ள இசை அரங்கில் இஸ்ரேலின் தேசிய ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் காசா மீதான இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைக் கண்டித்து இஸ்ரேல் இசைக்குழுவுக்கு எதிராக 3 பெண்கள் உட்பட 4 பேர் சிவப்பு நிற புகை குண்டைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை ஏற்படுத்தினர்.
இதையடுத்து அங்குப் பதற்றமான சூழல் எற்பட்டதால் 4 பேரையும் பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
















