திமுக எதிர்ப்பு என்பது தமிழகம் முழுவதும் உள்ளதாகவும், குறிப்பாகச் சென்னையில் அதிகம் உள்ளதாகவும் பாஜகவின் வேளச்சேரி தொகுதி பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை, வேளச்சேரியில் பாஜக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதி பொறுப்பாளரான அமர் பிரசாத் ரெட்டி, பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று, பாஜக முகவர்கள் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது மேடையில் பேசிய கராத்தே தியாகராஜன், S.I.R-ஐ திமுக எதிர்க்கும் அதே வேளையில், பூத் நிலை அதிகாரிகள் திமுகவின் பரிந்துரையின் பெயரில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்பட்டால், நமது வெற்றி உறுதி என வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு, கராத்தே தியாகராஜன் நம்பிக்கை அளித்தார்.
















