பீகாரில் ஓட்டளிக்க சென்ற எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரல்களிலும் மை இருந்தது சர்ச்சையான நிலையில், அதற்குத் தேர்தல் அதிகாரியின் தவறே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
பீகாரில் உள்ள 121 தொகுதிகளுக்குக் கடந்த 6-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரியும் வாக்களித்தார். அப்போது அவரது 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது.
இது ஷாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்த ஆம் ஆத்மி கட்சி, பீகார் தேர்தலில் வாக்கு மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டியது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி வாக்கு சாவடிப் பணியாளர் முதலில் தவறுதலாக ஷாம்பவியின் வலது கையிலும், பின்னர் இடது கையிலும் மை வைத்துள்ளார் என பாட்னா மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
















