ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. இதன் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து 3 மற்றும் 4-வது போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. இதற்கிடையே வெற்றியை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி டி-20 போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்திருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் டி-20 தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
















