திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் இரவில் கடற்கரையில் தங்கி அதிகாலை கடலில் புனிதநீராடி பின்னர் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், இரவு நேரங்களில் கடற்கரை பகுதிகளில் திருட்டு சம்பவம் நடப்பதாக பல புகார்கள் வந்தன. இதைடுத்து, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதித்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கடற்கரையில் பக்தர்கள் தங்க எந்த தடையும் விதிக்கவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
















