ஓசூர் அருகே பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபரான ரவி பிரதாப் சிங் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.
தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குளியலறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலு குமாரி குப்தா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது காதலன் ரவி பிரதாப் சிங் என்பவர் டெல்லியில் தலைமறைவாக இருந்த நிலையில், அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து விமானம் மூலம் ரவி பிரதாப் சிங்கை ஓசூருக்கு அழைத்து வந்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் ரவி பிரதாப் சிங் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.
















