ஜம்மு-காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களைக் குறிவைத்து பந்திபோராவில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள நபர்களைக் குறிவைத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பந்திபோராவில் சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் நுழைந்து உடைமைகள் உள்ளிட்டவற்றை அவர்கள் சோதனையிட்டனர்.
















