அதிர்ஷ்டம் என்பது அலமாரியில் அல்ல…சில சமயம் சாலையோரத்திலும் நிற்கும் என்பது போல, தெலங்கானாவில் உள்ள கிராமமொன்றில் இரண்டாயிரம் நாட்டுக் கோழிகள், ஜாக்பாட்டாகக் கிடைத்துள்ளன.
ஹனும கொண்டா மாவட்டம் எலக்கத்தூரி கிராம மக்கள், காலை எழுந்து பார்த்தபோது எங்குப் பார்த்தாலும் நாட்டுக் கோழிகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன.
கோழிகளை எண்ணிப் பார்த்தால் சுமார் இரண்டாயிரத்திற்கு மேல் இருந்துள்ளது. ஆனால் எங்குத் தேடியும் கோழியின் உரிமையாளர் தென்படவில்லை.
இதனால் குஷியான மக்கள், இது கடவுள் கொடுத்த விருந்து என நினைத்து, அந்தக் கோழிகளைப் பிடிக்க முற்பட்டனர்.
ஊர் மக்கள் கோழிகளைப் பிடிக்கத் திரண்டபோது கோழிகள் ஓட்டம் பிடித்ததால், அந்தக் கிராமமே ஒரு மினி மாரத்தான் களம்போல ஆனது.
















