உத்தரப்பிரதேசத்தில் மாவு மில்லில் மாவு அரைக்கும் இயந்திரம் வெடித்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் உள்ள சர்கான் புஜுர்க் கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான மோஹித் கவுதம், மாவு மில்லுக்கு தினை பயிரை அரைப்பதற்காகச் சென்றார்.
அப்போது மாவு அரைக்கும் இயந்திரம் திடீரென வெடித்ததில் அருகில் நின்று கொண்டிருந்த மாணவன் மோஹித் கவுதமின் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாவு மில் மிகவும் பழமையானது என்பதால் போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















