அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தின் நடுவே கார் சென்றதில் 4 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடாவின் டாம்பா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் அதிவேகமாகச் சென்ற காரைப் போலீசார் நிறுத்த முற்பட்டனர்.
ஆனால், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் காரைத் துரத்திச் சென்றனர். இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் மோதியது.
இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















