ஒடிசாவில் பழைய அடுக்குமாடி கட்டடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கட்டாக் மாவட்டத்தின் மணி சாஹு சாக்கில் உள்ள பழைய அடுக்குமாடி கட்டடத்தின் பால்கனி நேற்றிரவு திடீரென இடிந்து, அருகில் இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.
இச்சம்பவத்தில் ஓட்டு வீட்டில் தங்கி இருந்த 6 பேரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பால்கனி இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















