புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த லேப் டெக்னீசியன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 3வது நாளாகப் போராட்டம் நடைபெற்றது.
கனபதிசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் இரண்டு லேப் டெக்னீசியன்கள் அங்குப் பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த மாணவ மாணவிகள், கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 வது நாளாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
















