டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், சிறார்கள் சமீப காலமாகச் சமூக ஊடகங்களில் மூழ்கியிருப்பது கவலை அளிப்பதாக, அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களால் குழந்தைகளின் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுவதாகக் கூறி அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களால் குழந்தைகளும், இளைஞர்களும் துாக்கம், அமைதியை இழந்து மன அழுத்தத்திற்கு ஆளாவது கண்டறியப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்தொழில் நுட்ப அமைச்சர் கரோலின் ஸ்டேஜ் கூறியுள்ளார்.
















