நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாய்க்கன் பாளையத்தில் வசிக்கும் மக்கள் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேய்ச்சல் நிலங்களில் உலா வரும் ஆடுகள் மற்றும் கோழிகளை தெரு நாய்கள் கடித்து குதறுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், 50க்கும் மேற்பட்ட கோழிகளை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
எனவே, கிராமத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















